அதிக விலையில் பொருட்கள் விற்பனை : பூம்புகார் மக்கள் குற்றச்சாட்டு

263
யாழ் பூம்புகார் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் பூம்புகார் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அங்கு வாழும் ஏழை மக்கள் அன்றாடத் தேவைக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக்கூட கொள்வனவு செய்ய முடியாதநிலையில்  பெரும்பாதிப்புக்குள்ளாவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசு விலைக்கட்டுப்பாடு நிர்ணயித்த நிலையிலும் இப் பகுதியில் தொடர்ந்து பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் இது தொடர்பாக சரியான தீர்வை அதிகாரிகள் பெற்றுத்தரும்படி அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
SHARE