அதிசக்தி வாய்ந்த மின் கம்பத்தூணுடன் மோதிய கார் நால்வர் படுகாயம்

226

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, பதுபொல எனும் இடத்தில் கார் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின் கம்பத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த விபத்து இன்று காலை 10.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், நான்கு பேர் படுகாயமடைந்து கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த கார் கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேனை, அலகல பகுதியை நோக்கி செல்லும் வழியிலேயே இவ்வாறு வீதியை விட்டு விலகி மின் கம்பத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

இதில் காரில் பயணித்த 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவரும், மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த கார் அதிசக்தி வாய்ந்த மின் கம்பத்தூணுடன் மோதுண்டதனால் மின் கம்பம் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதனால் அப்பிரதேசத்திற்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், அதனை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

SHARE