அமெரிக்காவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காதல் மனைவி இறந்த 20 நிமிடங்களில் கணவரும் அதே இடத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த அறையில் இருந்த கடிகாரமும் காதல் தம்பதியினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நின்று போனதுதான் ஆச்சரியம்.
கணவன் மனைவி இடையேயான திருமண பந்தம் இந்தியாவில் அதிகம் போற்றப்படுகிறது. ஒரு பக்கம் விவாகரத்துகள் நிகழ்ந்தாலும் தம்பதிகளிடையேயான ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை அதிகம் கடைபிடிக்கப்படுவது இந்தியாவில்தான்.
வெளிநாடுகளில் எல்லாம் திருமண பந்தத்திற்கு மதிப்பு இருக்காது என்றும் ஆடையை மாற்றுவது போல கணவனையோ மனைவியையோ மாற்றுவார்கள் என்றும் கூறுவதுண்டு.
அது பொய் என்று நிரூபித்துள்ளது அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
உடல்நலக்குறைவால் மனைவி இறந்த அடுத்த 20 நிமிடங்களில் கணவரும் அதே இடத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி மற்றும் ஜேனட் தம்பதிகளுக்கு திருமணமாகி 63 வருடங்கள் ஆகின்றன.
கடந்த சில வருடங்களாக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஜேனட், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.
தனது மனைவியை தினந்தோறும் மருத்துவமனையில் சென்று பார்ப்பதை 86 வயதான ஹென்றி வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹென்றி, தனது மனைவி இருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 31ம் தேதி தம்பதிகள் இருவருக்கும் உடல்நிலை மோசமடைந்தது.
மனைவிக்கு அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்தாத் கணவர் ஹென்றி. நினைத்தது போலவே சிகிச்சை பலனளிக்காமல் அன்று அதிகாலை 5.10 மணியளவில் ஜேனட் மரணமடைந்தார். அவரை தொடர்ந்து 20 நிமிடங்கள் கழித்து ஹென்றியும் உயிரும் பிரிந்தது.
இருவரும் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த கடிகாரம் ஹென்றி இறந்த நேரமான 5.30 மணிக்கு மேல் ஓடாமல் அப்படியே நின்றுவிட்டதாக அவருடைய மகன் தெரிவித்தார்.
63 வருட தாம்பத்திய வாழ்க்கையில் இணைபிரியாத கணவன்,மனைவியாக இருந்த ஹென்றி-ஜேனட் தம்பதியினர் மரணத்திலும் இணைபிரியாமல் ஒன்றாகவே மேல் உலகத்திற்கு சென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.