அதிரடி காட்டும் போதும் ஓய்வு பெறுவது ஏன்? மனம் திறந்த மெக்கல்லம்

338

 

நியூசிலாந்து அணித்தலைவர் மெக்கல்லம் அவுஸ்திலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

இலங்கை அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதில் 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

அப்போது பேசிய நியூசிலாந்து அணித்தலைவர் மெக்கல்லம், தான் அடுத்த வருடம் பெப்ரவரியில் நடக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார்.

இது பற்றி மெக்கல்லம் கூறுகையில், “அடுத்த ஆண்டு பெப்ரவரில் சொந்த மண்ணில் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவை சந்திக்கிறோம்.

இந்த தொடரின் கடைசி மற்றும் 2வது போட்டியுடன் நான் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். டி20 உலகக்கிண்ணப் போட்டிக்கு முன்னதாக விடைபெறவிருக்கிறேன்.

நான் முதுகுப்பகுதி காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறேன். எனது குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். இதற்காக நான் ஓய்வு பெறவுள்ளேன்.

நான் தற்போது கிறைஸ்ட்சச்சில் தான் வசிக்கிறேன். இங்கு நடக்கும் டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடுவது மிகவும் அழகானது” என்று கூறியுள்ளார்.

SHARE