அதிரடி முடிவு எடுத்த சபாநாயகர்

245

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் பிரித்தானியாவின் பாரளுமன்றத்தில் பேசுவதற்கு அந்நாட்டு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப்பை பிரித்தானிய பிரதமர் தெரசா மே கடந்த வாரத்திற்கு முன்னர் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினார். அதன் பின்னர் டிரம்ப் இந்தாண்டு பிரித்தானியா வருவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் டிரம்பிற்கு பிரித்தானிய சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் இந்தாண்டு ஜுலை மாதம் பயணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. பயணத்தின் போது அவர் பிரித்தானியாவின் மிகவும் பிரசிதி பெற்ற பாரளுமன்றத்தில் உரையாற்ற இருப்பதாக கூறப்பட்டது.

இது குறித்து பிரித்தானிய பாரளுமன்றத்தின் மூன்று சபாநாயகர்களில் ஒருவரான John Bercow அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் பிரித்தானிய பாரளுமன்றத்தில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

மேலும் அவர், டிரம்ப் இனவெறி மற்றும் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதாக முன் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 நாடுகளுக்கு தடை விதித்தை தான் பெரிதும் எதிர்ப்பாதகவும், இதற்கு அவர் இடை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

டிரம்ப் பாரளுமன்றத்தில் பேசுவதற்கு 163 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கு முன்னர் இங்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் உரையாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானிய சபாநாயகரின் இந்த பேச்சுக்கு பொதுமக்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

SHARE