பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தொடரில் களமிறங்கிய சில வீரர், வீராங்கனைகள் போட்டியின் போது மோசமாக காயமடைய, அவர்களின் பதக்க கனவு சுக்குநூறாக நொறுங்கியது.
நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு அவர்கள் பெரிய காயத்துடன் ஒலிம்பிக் அரங்கை விட்டு ஏக்கத்துடன் வெளியேறினர், இதில் சில சம்பவங்களை பற்றி பார்க்கலாம்.
காலை முறித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர்
ரியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் வாரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் Samir Ait மோசமான லேண்டிங்கால் தனது காலை முறித்துக் கொண்டு ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவுஸ்திரேலிய வீரரின் கைமூட்டு விலகியது
ரியோ ஒலிம்பிக்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட அவுஸ்திரேலிய வீரர் Talgat Ilyaso-ன் கை மூட்டு விலகியது.
அவுஸ்திரேலிய வீராங்கனையின் தோள்பட்டை இறங்கியது
மகளிர் ஈட்டி எறிதல் போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி தகுதிச் சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை Kim Mickle-ன் வலப்பக்க தோள்பட்டை இறங்கியது. “என்னை காப்பாற்றுங்கள்” என அவர் வலியில் துடித்தார்.
கையை முறித்துக் கொண்ட பளுதூக்கும் வீரர்
ரியோ ஒலிம்பிக்கில் கடந்த வாரம் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 195 கிலோ எடையை தூக்கிய ஆர்மேனிய வீரர் Andranik Karapetyan-ன் இடது கை முறிந்தது. 2வது வாய்ப்பின் போது இந்த சம்பவம் நடைபெற்றது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிலைகுலைந்த பிரான்ஸ் வீரர்
ரியோ ஒலிம்பிக்கில் வயிற்று போக்கு இருந்த போதும் 50 கி.மீ ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரர் Yohann Diniz நிலைகுலைந்து கீழே விழுந்தார். இருப்பினும் விடா முயற்சியால் இலக்கை எட்டிய அவர் 8வது ஆளாக வந்தார்.
ரசிகர்கள் மீது விழுந்த கமெரா
ரியோ ஒலிம்பிக்கில் 65 அடி உயரத்தில் சுற்றுத்திரிந்த ஸ்பைடர் கமெரா திடீரென அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 7 ரசிகர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.