அதிர்ச்சி ஆனால் உண்மை! கழிவறைக்குள் பிரசவித்த குழந்தை

353

 

கனடா- குழந்தைகள் எப்போதும் வைத்தியசாலையில் பிறப்பார்கள்.சில சமயம் பெற்றோர் எதிர்பார்த்ததை விட வேகமாக பிறந்து விடுவார்கள்.ஆனால் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வினிபெக்கை சேர்ந்த தம்பதியர்களிற்கு காதலர் தினத்தன்று குழந்தை பிறந்துள்ளது.
இது ஒரு வகையான அதிர்ச்சி என குழந்தையின் தந்தை விலின் டொரியன் தெரிவித்தார்.
இவரது குழந்தை இன்னமும் ஒன்றரை மாத காலத்திற்கு வர வேண்டியவன் இல்லை.
தான் சாதாரணமாக கழிவறைக்கு செல்ல வேண்டி வந்ததென தாயார் யுவான் வொன்ரைன் தெரிவித்தார். ஆனால் தான் இருந்ததும் தனது பனிக்குடப்பை உடைந்துவிட்டதென கூறினார்.
அம்புலன்சை அழைக்க முயல்கையில் குழந்தையின் தலை வெளியே வருவதை உணர்ந்தார். அம்புலன்சும் வர தாமதமாகியது. ரொயிலெட்டுக்குள் விழுந்து  குழந்தை உலகத்திற்கு வந்தான்.
குழந்தை வெளியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இத்தனையும் நடந்த பின்னர் அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் வந்து சேர்ந்தனர். பெற்றோர் குழந்தைக்கு கிறிஸ்தோபர் என பெயர் வைத்தனர்.
குழந்தை சிறியவனாக இருந்தாலும் ஆரோக்கியமாக உள்ளான். பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளான்.

babybaby1

 

– See more at: http://www.canadamirror.com/canada/57441.html#sthash.x4NMtGWD.dpuf

SHARE