அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் கவனத்திற்கு!

181

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர் நுழைவாயிலில் செலுத்துவதற்கு போதுமான பணத்தை மாற்றி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைத்துக் கொள்ளும் நோக்கில் அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பொதுவாக நாளாந்தம் தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் 75000 வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் பண்டிகைக் காலங்களில் 120000 வாகனங்கள் வரை அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வெளியேறும் பகுதியில் நீண்ட வரிசை ஒன்று ஏற்படுவதனை தடுப்பதற்காக போதுமான பணத்தை தம்வசம் வைத்திருக்குமாறு சாரதிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் தரம் தொடர்பில் ஆராயப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE