நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை மணித்தியலத்துக்கு 60 கிலோமீற்றராக குறைக்குமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பரிமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
களுத்துறை – மத்துகம வீதியில் வௌ்ளநீர் பெருக்கெடுத்துள்ள காரணத்தினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.