ஜே.ஆர் முதல் மைத்திரி வரை 40 ஆண்டுகள் மக்களின் வாழ்வு??, விலை உயர்வுகளும் வரிச்சுமைகளும் மக்களின் தலைகளிலா? உள்ளிட்ட பல வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி யாழில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை யாழ். நகர்ப்பகுதியில் ஆரம்பமாகியுள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் செய்யப்படுகிறது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.