அத்துமீறி வயல் செய்கையில் ஈடுபடுவதை கண்டித்து மூதூரில் ஆர்ப்பாட்டம்

306
மூதூர் கங்குவேலி கிராமசேவகர் பிரிவில் உள்ள படுகாடு மற்றும் முதலைமாடு ஆகிய பகுதிகளிலுள்ள தமது 1500 ஏகார் வயற் காணிகளில் அத்துமீறிய வயற் செய்கையினை சிலர் மேற்கொள்வதனால் தமது காணிகளை திரும்பவும் பெற்றுத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மதியம் 11.30 மணிக்கு மூதூர் பிரதேச செயலக வாயிலை மறித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த காணிகளில் தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்ததாகவும் நாட்டில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலைகளின் போது தாம் இடம்பெயர்ந்தது சென்ற காலப்பகுதிகளில் அப்பகுதியை அண்டிய தெகிவத்த சமகிபுர பகுதியிலுள்ள விகாராதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரால் அடாத்தாக அந் நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்

SHARE