வடகொரியா மேற்கொண்டு வரும் தொடர் ஏவுகணை சோதனையால், அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு உலகநாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும், வடகொரியா தனது தொடர் சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனால் வடகொரியா மீது புதிய பொருளாதர தடை விதிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கின்றன. இதில் நிரந்த உறுப்பு நாடுகள் பட்டியலில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடம்பிடித்துள்ளன.
இந்த நிரந்த உறுப்பு நாடுகள் பட்டியலில் ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
ஆனால் கடந்த சின தினங்களாக வடகொரியாவின் செயல்பாடுகளை ரஷ்யா மற்றும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் காரணமாக இன்றைய தீர்மானத்தில், ரஷ்யாவும், சீனாவும் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்று கூறப்படுகிறது
இந்த புதிய பொருளாதார தடை மூலம் வடகொரியாவின் வருவாயில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.