அந்த மக்களின் ஆன்மா சாந்தியடையட்டும் – ஆர். ஜே . பாலாஜி காட்டம்

233

அந்த மக்களின் ஆன்மா சாந்தியடையட்டும் - ஆர். ஜே . பாலாஜி காட்டம் - Cineulagam

நேற்று தமிழ்நாடு முழுவதும் நடை பெற்ற சட்டமன்ற வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தல் கமிஷன் செய்த விளம்பரத்துக்கும் மற்றும் சில நடிகர்கள், கலைஞர்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் எப்படியும் 80 சதவீதம் வாக்குப்பதிவு வந்து விடும் என்று நம்பி இருந்தது தேர்தல் கமிஷன்.

ஆனால் சென்னையில் தான் மிகவும் கம்மியாக வாக்குப்பதிவு அடைந்தது. இதை அறிந்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இத்தேர்தலுக்காக பிரபல ஆர் ஜே பாலாஜி பல வீடியோக்களை செய்தார்.

அவர் தனது ட்விட்டர் பக்ககத்தில் ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார் ”சென்னையில் 57 சதவீதம் தானா. அட போங்கடா டேய். தமிழ்நாட்டில் 100 சதவீத வாக்குபதிவுக்காக செய்யப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரமும், அதற்கான உழைப்பும் எல்லாம் வீண். மீதமுள்ள 43 சதவீத மக்களின் ஆன்மா சாந்திடையவதாக” என்று காட்டமாக தெரிவித்துள்ளார் .

https://twitter.com/RJ_Balaji/status/732202674494439429
SHARE