மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் உடற்பயிற்சியை செய்யலாமா? என்ற சந்தேகம் அனைவரிடமும் நிலவுகிறது.
சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தபோக்கினால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்து விடுவார்கள். அதிலும் சிலர் மாதவிடாய் வலியால் உடற்பயிற்சியை தவிர்க்கின்றனர்.
ஆனால் உண்மையில், அதிக தீவிர உடற்பயிற்சியான கிராஸ் ஃபிட், கிக் பாக்ஸிங் அல்லது எடை தூக்கும் பயிற்சி போன்றவை மாதவிடாய் காலத்தில் செய்வது நல்லது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.
இந்த உடற்பயிற்சியை செய்வதன் மூலம் நம் மூளையில் உள்ள என்டோர்பின் ஹார்மோன் சுரக்கப்பட்டு ஒருவித மன அமைதியை தருவதுடன், மாதவிடாய் வலியையும் குறைக்கும்.
எனவே மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதினால் ரத்தபோக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதுவும் இதயத்திற்கான ஓட்டம், ஜாக்கிங், வாக்கிங், படியேறுதல் போன்ற உடற்பயிற்சிகளை மாதவிடாய் காலத்தில் செய்வது மிகவும் நல்லது.
இதயத்திற்கான உடற்பயிற்சியினை செய்வதால், என்டோர்பின் ஹார்மோன் சுரக்கப்பட்டு ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உடல் வெப்பத்தை மாதவிடாய் காலங்களில் சீராக்க உதவுகிறது.
எனவே மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.