அனந்திக்கு பாராளுமன்ற ஆசனம் வழங்கக்கூடாது சுரேசிடம் மாவை உறுதியாகத் தெரிவிப்பு!

சில தினங்களுக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் க்கு யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இரு ஆனசங்களில் ஒன்றை அனந்திக்கு வழங்க சுரேஸ் பிறேமச்சந்திரன் முன்வந்த போதும் அதனை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வழங்கக்கூடாது என முற்றாக நிராகரித்துவிட்டார். எக்காரணம் கொண்டும் அனந்திக்கு பாராளுமன்ற ஆசனம் வழங்கக்கூடாது என்பதும், அனந்தி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் நிற்கமாட்டா? என்ற கதையும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். அதேநேரம் அவர் தற்பொழுது தமிழரசுக் கட்சியின் அங்கத்துவமாக இருப்பதால் நாங்களும் அவாவுக்கு ஆசனத்தை வழங்க மாட்டோம். நீங்களும் (சுரேஸ்) ஆசனம் வழங்கக்கூடாது என மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளதாக அறிவித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குப் போட்டியிட இடமளிக்கவில்லை என்றும், யாழ் மாவட்டத்தில் சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளதாகவும் பி.பி.சிக்கு அனந்தி சசிதரன் அண்மையில் செவ்வி அளித்திருந்தார். அத்துடன் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தி, வேட்புமனுத் தாக்கலுக்கான படிவங்களையும் பெற்றுச் சென்றிருந்தார். எனினும், நேற்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில், அனந்தி சார்பில் வேட்புமனு சமர்ப்பிக்கப்படவில்லை. அவர் இறுதி நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவைக் கைவிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. எனினும், அதற்கான காரணம் தெரியவரவில்லை.