அனர்த்தங்களால் உயிரிழந்த அரச ஊழியர்களின் தகவல்களை திரட்ட தீர்மானம்

267

அனர்த்தங்களால் உயிரிழந்த அரச ஊழியர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, அரச மற்றும் மாகாண தொழிற்சங்க சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் அனர்த்தத்திற்குள்ளான அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் அஜித் கே.திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை திரட்டுவதற்கான மத்திய நிலையங்களை மாகாண மட்டத்தில் நிறுவியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (11)

SHARE