அனர்த்தம் காரணமாக அழிவடைந்த ஆவணங்களை அரசாங்கம் இலவமாக வழங்க உள்ளது

257

Srilanka logo_CI

அனர்த்தம் காரணமாக அழிவடைந்த ஆவணங்களை அரசாங்கம் இலவசமாக வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக தொலைந்துபோன ஆவணங்களை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் மக்களின் ஆவணங்கள் அழிவடைந்துள்ளமை குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக 2800 கிராம சேவை பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொலைந்து போன மற்றும் அழிவடைந்த ஆவணங்கள் கிராம சேவகர்களின் ஊடாக மீளவும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
SHARE