அனாதையான குட்டி ரசிகரை அரவணைத்த ரொனால்டோ! நெகிழ்ச்சி சந்திப்பு

266

 

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெற்றோரை இழந்து அனாதையாக நின்றவன் ஹைதர் அலி என்ற 3 வயது சிறுவன்.கடந்த நவம்பர் 12ம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஹைதர் அலியின் பெற்றோரும் அடக்கம்.

கால்பந்து ஆர்வம் கொண்ட ஹைதருக்கு ரொனால்டோ தான் ஹீரோ. இது தொடர்பாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியது.

இதனையறிந்த ரியல் மாட்ரிட் அணி ஹைதரை ரியல் மாட்ரிட் நகருக்கு விருந்தினராக அழைத்து வந்தது.

அங்கு தனது ஹீரோவை நேரில் பார்த்த ஹைதர் ஆனந்தத்தில் அழ ஆரம்பித்தான். அவனை அரவணைத்த ரொனால்டோ அவனுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் ரியல் மாட்ரிட் கிளப் தலைவர் ஃபுளோரெண்டினா பெரேஸ் ஹைதருக்கு 7 என்ற நம்பர் கொண்ட ஜெர்சியை வழங்கினார். அதில் ஹைதர் என்று எழுதப்பட்டிருந்தது.

இதனையடுத்து ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி கிண்ணங்கள் அடங்கிய அறையை அவர் ஹைதருக்கு சுற்றி காண்பித்தார்.

ஸ்பானீஷ் லீக்கில் இன்று ரியல் வால்கனோ அணிக்கு எதிராக ரியல் மாட்ரிட் விளையாடுகிறது. இந்தப் போட்டியை கவுரவ விருந்தினராக ஹைதர் பார்க்கப் போகிறான்.

SHARE