அனிதாவின் இறுதிச்சடங்கில் திட்டமிட்டு நடந்தவை ரகசியம் கசிந்தது

250

அனிதாவின் இறுதிச்சடங்கில் திட்டமிட்டு நடந்தவை: ரகசியம் கசிந்தது

நீட் தேர்வு பாதிப்பின் காரணமாக அரியலூரை சேர்ந்த தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அதிகமான இளைஞர்கள் சென்றிருந்தனர்.

மாணவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபடும்பொழுது சிலர் அவர்களை அடக்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள தண்ணீர் டேங்க் மீது 10க்கு மேற்பட்டவர்கள் ஏறி நின்று போரட்டத்தை ஒடுக்கினால் தற்கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.

அனிதாவின் இறுதிச்சடங்கில் திட்டமிட்டு நடந்தவை: ரகசியம் கசிந்தது

பின்னர் முன்னால் தி.மு.க எம்.எல்.ஏ சிவசங்கர் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் கலைந்து செல்லுங்கள் என்று கூற, போராட்டத்தில் இருந்த மாணவன் உங்க வேலையை பார்த்துகிட்டு போங்க என்று சொல்ல, அங்கிருந்த தி.மு.க வினர் போராட்ட மாணவர்களிடம் பிரச்சனையில் ஈடுப்பட்டனர்.

காவல்துறை மாணவர்களை ரோட்டில் தள்ளிக்கொண்டே வந்து பிறகு முதன்மை போராட்ட நபர்களை கைது செய்தது. அவர்கள் மீது CrNo:261/2017 u/s 143,341,188. IPC பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரவு 10 மணிக்கு கைது செய்தவர்களை நள்ளிரவு 2 மணிக்கு பிறகு விடுவித்தனர்..

இது போன்று பொய் வழக்கு போட்டு மாணவர்களின் போராட்டத்தை திசை திரும்பியதாக கூறப்படுகிறது.

SHARE