அனிருத்தின் வளர்ச்சியில் தனுஷிற்கு பெரும் பங்கு உள்ளது. அதேபோல் அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்ப்படுத்திக்கொண்டு விஜய், அஜித் படங்கள் வரை இசையமைக்க ஆரம்பித்து விட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் விஐபி படத்தின் அவரின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் ரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்காக வாழ்த்து தெரிவித்த தனுஷ், அதில் அனிருத் என்ற பெயரை குறிப்பிடவே இல்லை, இது பெரிய விஷயம் இல்லை என்றாலும், சமீபத்தில் அனிருத் ‘கெத்த விடாத கெத்த விடாத’ என தன் டுவிட்டரில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இனி இணைவது மிகவும் சிரமம் தான் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.