அனிருத் இல்லாத குறை பெரிதாக தெரியவில்லை

191

அனிருத் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் தற்போது ரஜினியின் பேட்ட படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இந்நிலையில் அனிருத் இசையில் செம்ம ஹிட் அடித்த பாடல்கள் நிறைந்த படம் மாரி.

இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம்ம ஹிட் அடிக்க, அடுத்த பாகமான மாரி-2வில் அனிருத் இல்லை.

இதனால் ரசிகர்கள் ஷாக் ஆக, யுவன் என்று சொன்னதும் அமைதியானார்கள், ஆனால், அனிருத் கொடுக்கும் இசையை யுவனால் தரமுடியாது என்றார்கள்.

நேற்று படக்குழு ரவுடி பேபி என்ற சிங்கிள் ட்ராக் ஒன்றை வெளியிட்டது, இந்த பாடல் ஒரே நாளில் 2.7 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இப்பாடலை லைக்ஸ் செய்ய, கமெண்ட்ஸும் மிகவும் பாசிட்டிவாக வருகின்றது, இதனால், அனிருத் இல்லாத குறை பெரிதாக மாரி-2வில் தெரியவில்லை.

SHARE