அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லொறி ஒன்றினை மடக்கிப் பிடித்துள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் பொகவந்தலாவ பகுதியிலே 18.10.2016 அதிகாலை 3 மணியளவில் நல்லத்தன்னி விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மையங்கனையிலிருந்து 3 கியூப் மணல் ஏற்றிக்கொண்டு பொகவந்தலாவ பகுதிக்குச் சென்றபோதே அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொகவந்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மையங்கனையிலிருந்து கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி, கினிகத்தேன, வட்டவளை, அட்டன், நோர்வூட் வழியாக வந்த லொறி பொலிஸாரின் சோதனையின் போது அனுமதிப்பத்திரம் இல்லாமையினால் வந்ததாக லொறியின் சாரதி தெரிவித்துளளார். மீட்கப்பட்ட மணல் ஏற்றிவந்த லொறியையும் சாரதியையும் அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்