அனுஷ்காவுக்கு அம்மாவாக நடிக்கிறார் தபு

284

சினேகிதியே’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களில் நடித்தவர் தபு. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். அப்போது நாகார்ஜுனாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக 2005ம் ஆண்டு ‘அந்தரிவாடு’ படத்தில் நடித்தவர் அதன்பிறகு தெலுங்கு படங்களை ஏற்க மறுத்துவிட்டார்.

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவரை தெலுங்கில் நடிக்க வைக்க முயற்சி மேற்ெகாள்ளப்பட்டுள்ளது.‘பாகுபலி 2’ம் பாகத்தில் நடித்து வரும் அனுஷ்கா அடுத்து மற்றொரு சரித்திர படமாக உருவாகும் ‘பாஹக்மதி’யில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அசோக் இயக்குகிறார். இதில் அனுஷ்காவின் அம்மாவாக நடிக்க தபுவிடம் பேச்சு நடக்கிறது. அனுஷ்கா, தபு இருவரும் தோழிகள். தெலுங்கு படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த தபு, அனுஷ்காவின் நட்புக்காகவும் படத்தில் பிரதான கதாபாத்திரம் என்பதாலும் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறாராம். தபுவுடன் முறைப்படி ஒப்பந்தம் ஆனபிறகே இதுபற்றி பட தரப்பில் அறிவிக்கப்படுமாம்.

anushka

SHARE