அனுஷ்காவுக்கு கணவராக நடித்தவர் போலிஸாரால் கைது!

217

நடிகை அனுஷ்கா நடித்த பஞ்சாக்‌ஷரி 2010ல் தெலுங்கில் வெளியானது. இதில் அவருக்கு கணவராக நடித்தவர் நடிகர் சாம்ராட். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.

டோலிவுட்டை சேர்ந்த இவருக்கும் ஸ்வாதி ரெட்டி என்பவருடன் சமீபத்தில் திருமணம் ஆனது. இருவரும் சில காலங்கள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக தனியே இருக்கிறார்களாம்.

இந்நிலையில் அவரின் மனைவி அவரின் பேரில் போலிஸில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் இவர் ஸ்வாதியிடம் அதிகமான வரதட்சணை கேட்டு துன்புறுத்தியாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் ஸ்வாதி கிராமத்திற்கு பொங்கல் கொண்டாட்டத்திற்காக போன போது வீட்டிலுருந்த நகைகளை சாம்ராட் திருடி சென்றதோடு, சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கியதாகவும் கூறியுள்ளார்.

இதனால் செக்சன் 498 A பிரிவின் படி வழக்கு பதிவு செய்து போலிஸ் அவரை கைது செய்துள்ளது.

SHARE