இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடையேயான காதல் முறிவுக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவரான விராட் கோஹ்லி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை தீவிரமாக காதலித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித் திரிந்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். அனுஷ்கா சர்மாவும் கோஹ்லியின் ஆட்டதை பார்க்க மைதானத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். இந்நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்து விட்டனர். இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியாது. ஆனால் தற்போது அனுஷ்கா சர்மா நடிக்கும் சல்மான் கானுடனான திரைப்படம் தான் இருவரின் பிரிவுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. கோஹ்லி இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தனது ஆசையை அனுஷ்காவிடன் தெரிவித்துள்ளார். அப்போது ‘எதில் ஹைமுஷ்சில்’ படம் தவிர வேறுபட வாய்ப்புகளை ஏற்க மாட்டேன் என்று அனுஷ்கா சர்மா கூறியுள்ளார். இந்நிலையில் சல்மான்கானுடன் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்கா சர்மாவுக்கு வந்தது. ஆனால் அதை ஏற்க வேண்டாம் என்று கோஹ்லி கூறிவிட்டார். ஆனால் இந்த படத்தில் நடித்தே தீருவேன் என்று அடம்பிடித்துள்ளார் அனுஷ்கா சர்மா. இதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சல்மான் கானுடன் நடிப்பதற்கு தான் முதல் இடம் என்று கூறிய அனுஷ்கா சுல்தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டார். இதனால் கோபமடைந்த கோஹ்லி அனுஷ்காவுடனான தனது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம். |