அனுஷ்கா சர்மா-கோஹ்லி காதலில் விரிசல்

277

அனுஷ்கா சர்மா-கோஹ்லி காதலில் விரிசல்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நெருங்கிய நண்பர்களாக பழகியதுடன் காதல் ஜோடிகளாகவும் வலம் வந்தனர். வெளிநாடுகளுக்கும் சென்று டேட்டிங் செய்தனர். கிரிக்கெட் விளையாட்டில் கோஹ்லியின் கவனம் சிதற அனுஷ்கா சர்மாவின் நெருக்கம்தான் காரணம் என்று ரசிகர்கள் கமென்ட் வெளியிட்டனர். அது சர்ச்சையாக வெடித்தபோதும் இருவரும் கண்டுகொள்ளாமல் தங்கள் காதலை தொடர்ந்தனர். சமீபகாலமாக இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விராட்டுக்கு சீக்கிரமே திருமணம் செய்துகொண்டு செட்டிலாக வேண்டும் என்று ஆசை. அனுஷ்காவுக்கு சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை. திருமணம் செய்துகொண்டால் சினிமாவில் நிலைக்க முடியாது என்று அனுஷ்காவுக்கு சக தோழிகள் அட்வைஸ் செய்ததில் குழப்பம் அடைந்தார். தன்னை சீக்கிரமே திருமணம் செய்துகொள்ளும்படி அனுஷ்காவிடம் விராட் கூறினார். அதை ஏற்காத அனுஷ்கா, இன்னும் சில வருடம் நட்பாகவே இருப்போம். அதன்பிறகு திருமணம்பற்றி முடிவு செய்யலாம் என்றார். இது பிடிக்காததால் அனுஷ்காவைவிட்டு விராட் விலகிவிட்டாராம். இதையடுத்து அனுஷ்கா, விராட்டின் குடும்பத்தினருக்கு இடையேயும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறதாம்.

SHARE