அபிவிருத்திப் பணிகளை இலக்காகக் கொண்டு இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவதே இந்த சட்டத்தின் நோக்கமாகும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் இந்த புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டால் நாட்டில் தற்போது அமுலில் உள்ள அனைத்து சட்டங்களையும் பின்தள்ளி, புதிய சட்டம் அமுலாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஏனைய சட்டங்களை கட்டுப்படுத்தும் நிலைமை ஆரோக்கியமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக மின்சாரம், முதலீடு, புகையிரதம் போன்ற துறைகளில் தற்போது காணப்படும் சட்ட திட்டங்கள் நியமங்கள் ஆகியனவற்றை தேவையான வகையில் மாற்றியமைக்க புதிய சட்டத்தின் ஊடாக நிறுவப்படவுள்ள அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்திற்கு அதிகாரமுண்டு.
இந்த முகவர் நிறுவனத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் முன்னணி வர்த்தகர்கள் அங்கம் வகிப்பார்கள் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.