நாட்டின் சிறார்களுக்கு சீரான கல்வியை பெற்றுக்கொடுப்பதனை நோக்காக கொண்டு செயற்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீளவும் செயற்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சசில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் கல்வி அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டின் கல்வி கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டு செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் சட்டவிரோத அரசியல் மாற்றங்களினால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து செயற்படுத்த முடியாமை போனமை குறித்து கவலை அடைவதாகவும், நாட்டின் சிறார்களுக்கு சீரான கல்வியை பெற்றுக்கொடுப்பதனை நோக்காக கொண்டு செயற்படுத்தப்பட்ட 13 வருட கட்டாய கல்வி, சுரக்ஷா காப்புறுதி திட்டம், அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் உட்பட சாதகமான அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் செயற்படுத்த போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.