கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, பவன் கல்யான் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் பாம்புசட்டை.
இதில் பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்துள்ளார், இந்த படத்தில் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல், கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைப்பார்க்கும் பெண்ணாக கீர்த்தி நடித்துள்ளார்.
இப்படத்தின் பல காட்சிகளில் கீர்த்தி தன் நடிப்பால் ரசிகர்களை கண்கலங்க வைப்பாராம், அப்படி ஒரு அழுத்தமான நடிப்பை இதில் எதிர்ப்பார்க்கலாம் என படக்குழு கூறுகிறது.