அன்று கண்ணீர் விட்டு அழுதது ஏன்? அருண் விஜய் மனம் திறந்தார்

205

அருண் விஜய் நீண்ட வருடங்களாக தனக்கு ஒரு ப்ரேக் வேண்டும் என்பதற்காக போராடி வந்தார். அவரின் போராட்டத்திற்கு பலனாக என்னை அறிந்தால் படம் அமைந்தது.

அதை தொடர்ந்து 2 வருடம் கழித்து மீண்டும் குற்றம்-23 படத்தில் நடித்துள்ளார், இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் என்னை அறிந்தால் படம் முடிந்து இவர் அழுதுக்கொண்டே திரையரங்கை விட்டு வெளியே வந்தார். அதுக்குறித்து சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘அன்று பலருமே அஜித் சார் ரசிகர்கள் உன்னை பார்த்து திட்டி தீர்த்துவிடுவார்கள், வராதே என்று தான் கூறினார்கள்.

ஆனால், நான் தான் ஆர்வ மிகுதியால் திரையரங்கிற்கு சென்றேன், படம் முடிந்ததும் எல்லோரும் என்னை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர், அதன் காரணமாகவே ஒரு கட்டத்திற்கு மேல் அழத்தொடங்கி விட்டேன்’ என கூறியுள்ளார்.

SHARE