அன்று சாலையில், இன்று மாளிகையில்… 

269

அமெரிக்காவில் உள்ள Michigan மாநிலத்தில் வசித்து வரும் Mandy என்னும் பெண்ணுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

இவர்கள் வசிக்க வீடு என்பது இதுவரை இருந்ததில்லை. சாலையிலேயே தான் இதுவரை வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, இவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளது.

அது சம்மந்தமான ஒரு நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் Mandyயின் மகனான சிறுவன் தனக்கென்று ஒரு வீடு, தனி அறையை முதல் முறையாக இருப்பதை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிப்பது போல் உள்ளது.

இது பற்றி Mandy கூறுகையில், இது எங்களுக்கு உணர்ச்சிகரமான தருணம். இது வரை வீடு இல்லாமல் இருந்த எங்களுக்கு வாழ ஒரு வீடு தற்போது இருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.

அதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் சமயத்தில் இந்த விடயம் நடந்தது பெரும் மகிழ்ச்சி என கூறிய அவர், இதற்கு உதவிய தொண்டு நிறுவனம் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE