தாய்லாந்தில் உள்ள கிராமத்தில் குற்றுயிராய் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிர்பிழைத்து புத்த வஸ்திரத்தை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது பார்ப்பதற்கு பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் உள்ள குக்கிராமத்தில் Kachit Krongyut (53) என்ற முதியவர் மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, 20 செமீ துளையில் பிஞ்சுக்குழந்தை ஒன்று கிடந்துள்ளது.
குழந்தையின் கால் மட்டுமே மேற்புறத்தில் தெரிந்துள்ளது, அருகில் சென்று உன்னிப்பாக கவனித்த இவர், உள்ளே பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
விரைந்து வந்தவர்கள் குழந்தையை மீட்டு Wangyai மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு இக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இக்குழந்தை உடல்ரீதியாக தாக்கப்பட்டுள்ளது என்றும் கொலை செய்யும் நோக்கில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசாரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட பொலிசார், கருக்கலைப்பு செய்ய நினைத்து, அது முடியாமல் போன கட்டத்தில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்கள்.
ஆனாலும், இக்குழந்தை வாழ்வது வீணற்றது என நினைத்து இதுபோன்ற செயலில் இக்குழந்தையை பெற்றெடுத்த தாய் ஈடுபட்டிருப்பாள் என தெரிவித்துள்ளனர்.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் இக்குழந்தை தற்போது நலமாக உள்ளது, ஆனால் இக்குழந்தையின் பெயர் மற்றும் இருப்பிடம் எதுவும் வெளியாகவில்லை.
அன்று ரத்தக்கறைகளோடு உயிருக்காக போராடிக்கொண்டிருந்த குழந்தை, இன்று தனது மேனியில் புத்த வஸ்திரத்தை அணிந்துகொண்டு அழகிய சிரிப்போடு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது.
இந்த புகைப்படம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது, கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்றாலும் தாய்லாந்தில் அது பொதுவாக நடக்கும் ஒன்றாக உள்ளது,
கடந்த 2011 ஆம் ஆண்டு தாய்லாந்தில்சட்டவிரோதமாக 2,000 கருக்கலைப்பினை செய்த நபருக்கு 40 மாதங்கள் சிறைதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.