அபிவிருத்தி குழுவின் இணை தலைவராகவும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், வவுனியாவில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினராக என்னை தெரிவு செய்ததன் மூலம் மக்களுக்கு சேவை செய்பவனாக என்னை உருவாக்கியுள்ளீர்கள். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் எவரும் தன்னை ராஜாவாக எண்ணினால் மக்களுக்கு சேவை செய்யமுடியாது. என்னைப் பொறுத்த வரை நான் மக்களுக்கான சேவகனே. ஆதலால் எனக்கு மக்கள் தங்கள் குறைகளையும் ஆலோசனைகளையும் தெரிவிப்பதனூடாகவே அபிவிருத்தியை மேற்கொள்ளமுடியும்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரேயொரு சிறுபான்மையின பிரதிநிதி என்ற வகையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்மீது வைத்துள்ள நம்பிக்கையிலும், எனக்கு மாவட்ட ஒருங்கணைப்பு குழுக்களின் இணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற இனப்பாகுபாடுகளோ, கட்சிப்பாகுபாடுகளோ இன்றி என்னாலான சேவையை செய்வேன்.
இந்த இன ஒற்றுமைக்காகவே பல ஒப்பந்தங்கள் இந்த நாட்டில் உருவாக்கப்பட்டது. அனால் ஏதோ சில காரணங்களால் அவை ஏற்படுத்தப்பட்ட நோக்கங்கள் நிறைவேற்றப்படாமல் போய்விட்டது. பலர் ஜனாதிபதி பதவிக்கு வருமுன் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்ததும் அதிகாரத்தை குறைப்போம் என்றனர். ஆனால் யாரும் அதனை செயற்படுத்தவில்லை.
ஆனால் தற்போது ஜனாதிபதி தான் பதவியில் இருக்கும் போதே தனது அதிகாரங்களை படிப்படியாக குறைத்து வருகின்றார். குறிப்பாக கடந்த காலங்களில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் ஒரு சிலர் தலைமைப் பதவிகளை வைத்து அதனை சரியாக செய்யவில்லை. தற்போது பிரதேச செயலாளர்களுடனும் அரசாங்க அதிபர்களுடனும் பேசும் போது கடந்த கால அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடைபெற்று பல மாதங்கள் ஆகிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போது சரி சமமாக அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டங்களின் அபிவிருத்திக்கு முக்கிய காரணமான அபிவிருத்திக் குழுக்கூட்டங்களையும் அபிவிருத்தி குழுவையும் சிறப்பாக எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.