வ.மா.முன்னாள் சுகாதார அமைச்சரும், வவுனியா மாவட்ட மா.ச.உறுப்பினருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் கிராமிய அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் வட்டாரத்தில் நடைபெறும் அபிவிருத்தி வேலைகளை நேற்று (18.09) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதன்போது புதுக்குளம் மணியர்குளம் வீதி திருத்தம், கட்டையர்குளம் பிரதான வீதி திருத்தம் மற்றும் ஈஸ்வரன் விளையாட்டுக்கழக வாயிற்கதவு, பாதுகாப்பு வேலி கட்டுமானப்பணிகளையும் பார்வையிட்டார்.
மேற்படி திட்டங்களுக்கு மொத்தமாக ரூபா 4 மில்லியன் ஓதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.