அப்பலோ வைத்தியசாலையின் கணினிகளை ஊடுறுவல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் விஜய் மல்லையா ஆகியவர்களின் ட்டுவிட்டர் கணக்குகளை ஊடுறுவி பரபரப்பை ஏற்படுத்திய லெஜ்ஜியன் குழுவால் இவ்வாறு ஊடுறுவல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அப்பல்லோ வைத்தியசாலையில், முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிக்சை விபரங்களை வெளியிடப்போவதாகவும் அந்த குழு எச்சரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சிகிச்சை விபரங்கள் வெளியிடப்பட்டால் பாரிய பிரச்சினை ஏற்படும் எனவும் அந்த குழுவினர் தெரிவித்திருப்பதாகவும், இதன் காரணமாக ஒருவித பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அப்பலோ வைத்தியசாலையில், முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை விபரங்கள் தம்மிடம் இருப்பதாக தெரிவித்துள்ள அந்த குழுவினர் அதனை வெளியிட்டால் பாரிய சிக்கல் ஏற்படும் என வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியின் ட்டுவிட்டர் கணக்கையும் தாங்கள் ஊடுறுவ போவதாக லெஜ்ஜியன் குழு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.