தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கண் திறந்து மருத்துவர்களிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து இரண்டு பெண் மருத்துவர்கள் வந்ததற்கான ரகசியம் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு தற்போது பிசியோதெரசி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக மருத்துவர்கள் அடிக்கடி சென்று வருவதால் நோய் தொற்று அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.
எனவே மருத்துவர்களின் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இயந்திரம் ஒன்றை அப்பல்லோ நிர்வாகம் வாங்கியுள்ளது.
இதனை இயக்குவதற்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டும் உடனிருந்தால் போதும்.
இந்த இயந்திரத்தை பற்றி விளக்கம் அளிக்கவும், பிசியோதெரபி சிகிச்சைகள் குறித்து விவரிக்கவுமே சிங்கப்பூர் மருத்துவர்கள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.