அப்பல்லோ மருத்துவமனை இதுவரை வெளியிட்டுள்ள 5 அறிக்கைகளிலும் ஜெயலலிதா படிப்படியாக முன்னேற்றம்

454

 

கடந்த 2 வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு குழு ஒன்று சென்னை நோக்கி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

jaya-1

இதில் நுரையீரல்நோய் சிகிச்சை நிபுணர் Dr GC Khilnani, இதய நோய் சிகிச்சை நிபுணர் Dr Nitish Naik மற்றும் உணர்வு இழப்பு மருந்து கொடுக்கும் மருத்துவர் Anjan Trikha ஆகியோர் அடங்கிய குழு அப்பல்லோ மருத்துவர்கள் குழுவுடன் இணைந்து முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

அப்பல்லோ மருத்துவமனை இதுவரை வெளியிட்டுள்ள 5 அறிக்கைகளிலும் ஜெயலலிதா படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், மருத்துவர்கள் குழுவின் சிறப்பு கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

லண்டனின் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் அவசர பிரிவு சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரிச்சார்ட் பியெல் கடந்த வாரத்தில் சில நாட்கள் இங்கு வந்திருந்து சிகிச்சை அளித்துள்ளார்.

மருத்துவர் ரிச்சார்ட், நுரையீரலில் கடுமையான பாதிப்பு, சீழ்பிடிப்பு மற்றும் உள்ளுறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்டவைகளில் நிபுணர் என கூறப்படுகிறது. தற்போது மருத்துவர் ரிச்சார்ட் அளித்துள்ள பரிந்துரைப்படியே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே மருத்துவர் ரிச்சார்ட் அவசர பணி நிமித்தம் லண்டன் திரும்பியுள்ள நிலையில், அங்கிருந்து வேறொரு மருத்துவரை தமக்கு பதிலாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ அனுப்பி வைத்துள்ளதாகவும், அவருக்கு உறுதுணையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு குழு சென்னை விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE