அப்பாவி மக்களை தலையில் சுட்டுக் கொன்று வெறியாட்டம்! ஈராக்கில் தொடரும் அவலம்

277

28-1422425730-isil-militants-600

ஐ.எஸ் தீவிரவாத குழு ஈராக்கில் 40 பேரை தலையில் சுட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொசூல் நகரத்தைச் சேர்ந்த 40 அப்பாவி பொதுமக்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மொசூல் நகரில் உள்ள மக்களை அங்கிருந்து தப்பிக்க உதவிய அரசின் உளவாளிகள் என்று கூறி, 40 பேரையும் தலையில் சுட்டுக் கொன்று மரண தண்டனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியலுடன் மேற்கண்ட 40 பேரின் பூத உடல்களையும் மொசூல் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைவரும் தலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE