அமலாபாலின் படத்தில் ஒப்பந்தமாகிய கங்கனா ரணாவத்!!

161
அமலாபால் வேடத்தில் கங்கனா ரணாவத்

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவதாக ‘ஆடை’ படத்தை இயக்கினார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்தார். கடந்த ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
பல சர்ச்சைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரத்னகுமார். அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கங்கனா ரணாவத் - அமலாபால்கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் கங்கனா ரணாவத், இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE