பிரபல நடிகையான அமலா பால் இயக்குனர் விஜய்யை பிரிந்து வாழ விவாகரத்து முடிவை கடந்த வருடம் எடுத்திருந்தார்.
ஒரே வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் விரைவில் அப்படியொரு முடிவை அறிவித்தது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
ஆனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் இன்னும் அன்பு வைத்துள்ளதாக அமலா பால் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தற்போது இயக்குனர் விஜய் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் எங்கள் பிரிவிற்கு என் அப்பாவே காரணம் என்று சொல்லிக்கொண்டு வருகிறாராம்.
மேலும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக விஜய் தனது குடும்பத்தாருடன் இல்லாமல் தனியே வாழ்ந்துவருவதாக சொல்லப்படுகிறது.