அமாவாசையில் பிறந்தால் திருடர்களாக இருப்பார்களா? இது உண்மையா?

212

அமாவாசையில் பிறக்கும் குழந்தைகள் அவர்களின் எதிர்காலத்தில் திருடனாக இருப்பார்கள் என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம் அல்லவா?

அவ்வாறு கூறுவது உண்மையா? இல்லையா? என்பதை பற்றி இப்போது தெரிந்துக் கொள்வோம்.

அமாவாசை அன்று பிறப்பவர்கள் திருடர்கள் என்பது உண்மையா?

அமாவாசை என்பது ஆத்மகாரகனான சூரியன் மற்றும் மனோகாரனான சந்திரன் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் சந்திக்கும் நாள் ஆகும்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி திதி அன்று ஒன்பது கிரகங்களும் வலுவடைகின்றது. எனவே இந்த இரண்டு தினங்களிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக திறமை உடையவராக இருப்பார்கள்.

அமாவாசையில் பிறந்தவர்களுக்கு மூளையின் பலம் அதிகமாக இருப்பதால், இவர்கள் தங்களின் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களின் வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பொறுமைகள் இல்லாமல் இருப்பார்கள்.

இதனால் இவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை தானே உருவாக்க நினைப்பதால், சில தவறுகளை அவர்கள் அறியாமல் செய்து விடுவார்கள்.

இவர்கள் அதிக திறமைசாலியாக இருப்பதால், மற்றவர்கள் இவர்களுடைய திறமைகளை அங்கீகரிக்க மாட்டார்கள், அதற்காக இவர்கள் வாழ்க்கையை வெறுத்து, தங்களைத் தானே தலைவன் மற்றும் அரசனாக நினைத்துக் கொள்வார்கள்.

இதனால் அவர்களை தலைக்கனம் பிடித்தவர்கள் என்று மற்றவர்கள் கூறுவார்கள். ஆனால் இவர்களை நன்றாக புரிந்துக் கொள்பவர்களுக்கு மட்டுமே இவர்களின் தந்திரம் தெரியும்.

அமாவாசையில் பிறந்தவர்கள் எப்போதும் ஏதாவது ஒரு மன வறுத்தத்திலேயே இருப்பார்கள், இவர்களின் மனதில் எப்போதும் ஒரு தேடல் இருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள்.

ஏனெனில் இதற்கு அமாவாசை அன்று சந்திரன் வலுவிழப்பது தான் காரணமாகும். இவர்கள் ஏதாவது ஒன்றில் சாதித்து விட்டாலும் கூட நாம் இன்னும் சாதிக்கவில்லை என்ற மன உளைச்சலில் இருப்பார்கள்.

நல்ல வாழ்க்கை துணை அமைந்தாலும், இன்னும் நல்லவராக அமைந்திருக்கலாமே என்று எண்ணுவார்கள். எதிலுமே இவர்கள் திருப்தி அடைந்தாலும் கூட குறை கூறுவார்கள்.

அமாவாசையில் பிறந்தவர்கள் நிச்சயம் திருடுபவர்கள் தான். ஆனால் பொருட்களை அல்ல, மற்றவர்களின் மனதைத் திருடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களின் திறமையினால் இவர்கள் ஒரு அறிவியல் திருடர்கள் என்று கூறலாம்.

SHARE