1980, 90களில் பிரபல நடிகையாக பல படங்களில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ரஜினியுடன் நடித்த படையப்பா படம் அவரை புகழின் உச்சிற்கே கொண்டு சென்றது.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிநடைப்போட்டு வருகிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணனின் ஆபாச நடிகை வேடம் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் எஸ்.ஜே.சூர்யா இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை வைத்து தயாரித்துவரும் உயர்ந்த மாமனிதன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இப்படத்தில் இவர் அமிதாப்பச்சனிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.