அமெரிக்காவின் இலங்கை தொடர்பான தீர்மானம் உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தியே வெளியிடப்பட்டுள்ளது.
அந்த உள்ளகப் பொறிமுறைக்கு நம்பகத் தன்மை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நபர்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எங்களைப் பொறத்தவரையில் இந்த தீர்மானம் ஏமாற்றமாகவே உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.