அமெரிக்கத் தீர்மானம்! துயரம் கொஞ்சம்! ஏமாற்றம் கொஞ்சம் – பிரிட்டிஸ் பா.உறுப்பினர் ரனியா

344
இனம்புரியாத உணர்வுகளுடன் இருக்கிறேன். துயரம் கொஞ்சம், ஏமாற்றம் கொஞ்சம். பலரும் கருதியிருப்பது போன்று இந்த தீர்மானம் உறுதியானது அல்ல என்பதையே நானும் அழுத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மாற்றத்திற்கான வாய்ப்புகள் மிகுதியாகவே புலப்படுகின்றது. உறுதியான ஒரு தீர்மானம் கொண்டுவர உலகளாவிய பிரதிநிதிகளை அழுத்தம் தரவே நான் இங்கே வந்திருக்கிறேன்.

பெரும்பாலான பிரதிநிதிகள் கோருவது போன்று, சாட்சிகளை பாதுகாக்கும் வரைவு மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தை விலக்குவதே முழுமையான தீர்வு ஆகும்.

மேலும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அல்லது மனித உரிமை அமைப்பின் அலுவலகம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கண்டிப்பாக அமைய வேண்டும்.

இலங்கையில் புதிய ஒரு தொடக்கத்திற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. மேலும் உலகளாவிய பிரதிநிதிகள் கண்டிப்பாக இலங்கையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வரவேண்டும்.

இலங்கையில் நீதியை நிலைநாட்ட போதுமான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற Tania Mathias தெரிவித்துள்ளார். ஐ.நாவில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள அறிக்கை தொடர்பாக லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

SHARE