அமெரிக்கர்களை குழப்பிய வடகொரியா! இடையில் வந்த இலங்கை

240

அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கும் இடையில் பனிப்போர் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் மத்தியில் மூன்றாம் உலகப் போர் குறித்த பதற்றம் அதிகரித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சமீப காலமாக அதிகளவாக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து வடகொரியா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவில் உலக வரை படத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வட கொரியாவிற்கு பதிலாக இலங்கையை அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1746 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் நான்கு பேர் வடகொரியாவிற்கு பதிலாக இலங்கையை அடையாளம் காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, நேபாளம், ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளையும் வடகொரியாவிற்கு பதிலாக அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆய்வின் போது 1746 பேரில் 36 வீதமானவர்கள் வடகொரியாவை சரியாக அடையாளம் காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வடகொரியாவை சரியாக அடையாளம் காட்டியவர்கள் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியாவை அடையாளம் காண முடியாதவர்கள், இராணுவ நடவடிக்கைக்கு, அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தினர் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE