அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பலை வாங்கும் இலங்கை

241

coluss-new-orleans-front

அமெரிக்காவில் இருந்து கடல் பாதுகாப்பு கப்பல் ஒன்றை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் ஏற்கனவே இலங்கைக்கான சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர் கடற்படைக்கு தேவைகள் கருதி, விரைவு தாக்குதல் கப்பல்களை விட தற்போது பாரிய கப்பல்களே தேவைப்படுகின்றன.

எனவே இலங்கை குறித்த கப்பலுக்கான கோரிக்கையை விடுத்திருந்தது என்று கடற்படை தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய கோவாவில் கட்டப்படும் இரண்டு ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களையும் இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்

SHARE