அமெரிக்காவின் தீர்மானத்தில் கலப்புநீதிமன்றம் குறித்த பரிந்துரைகள் உள்ளடக்கப்படவேண்டும்

337

இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் கலப்பு நீதிமன்றம் மூலம் யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் விசாரணை குழுவின் பரிந்துரையையும் உள்ளடக்குமாறு அமெரிக்க காங்கிரஸின் 11 உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் ஹெரிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். புதிய தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா பேச்சுக்களை மேற்கொள்ளவேண்டும். ஐக்கியநாடுகளின் விசாரணை குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளிற்கு ஆதரவளிப்பது என்ற தனது நிலைப்பாடு குறித்து அமெரிக்கா உறுதியாகயிருக்கவேண்டும்.
இதற்காக அமெரிக்காவின் தீர்மானத்தில் கலப்புநீதிமன்றம் குறித்தபரிந்துரைகள் உள்ளடக்கப்படவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். இலங்கையின் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளகூடிய பக்கச்சார்பற்ற நடைமுறையை முன்னெடுப்பதற்கு இது அவசியம் என நாங்கள் கருதுகின்றோம்,என  அமெரிக்க காங்கிரஸின் 11 உறுப்பினர்களும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE