
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மரபணு தொழில்நுட்பத்தை இலங்கை நோயாளிகளுக்கான சிகிச்சை போது வழங்குவதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மரபணு தொழில்நுட்பம் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதனை பயன்படுத்தும் முறை தொடர்பான அறிக்கையை தயாரித்து எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மரபணு தொழில்நுட்பத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மரபணு சிகிச்சை முறை தொடர்பில் பயிற்சி பெற்ற வைத்தியர்கள் 9 பேர் இதனை இலங்கையில் செயற்படுத்துவதற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மரபணு தொழில்நுட்பம் தொடர்பில் பயிற்சி பெற்ற வைத்தியர்கள் இருவர் வெளிநாட்டில் உள்ளமையினால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மரபணு தொழில்நுட்பம் தொடர்பில் குறித்த வைத்தியர்களுக்கு அமெரிக்காவின் ஹுஸ்டன் உட்பட மூன்று பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று கொள்ளவுள்ளனர்.
மரபணு தொழில்நுட்ப சிகிச்சை பிரிவு ஒன்றை இங்கே அமைப்பதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளது.