அமெரிக்க- இலங்கை படைகளுக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போதே, ஏழாவது கப்பற் படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கட்டளைக் கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.
இதன் போது, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் அதிகாரிகளுக்கும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளுக்கும் இடையில் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கப்பலில், பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
இதன் போது “நாம் இங்கு மீண்டும் வர விரும்புகிறோம். ஏழாவது கப்பற் படையணியின் மேலும் கப்பல்களை கொண்டு வர விரும்புகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், விமானப்படை, கடற்படையைச் சேர்ந்த 16 அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, அமெரிக்க-இலங்கை படையினருக்கான இருதரப்பு பயிற்சி வாய்ப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம்திகதி கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கப்பல், நேற்று இந்தியாவில் மும்பைத் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.