அமெரிக்காவில் 2 லட்சம் வெளிநாட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம்!

222

அமெரிக்காவில் 2 லட்சம் வெளிநாட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம்!

அமெரிக்காவில் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது எச்-1பி விசாவில் பணியாற்றும் வெளிநாட்டினரின் வாழ்க்கைத் துணையும் அங்கு வேலை தேடிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட் டுள்ளது.

அதன்படி சுமார் 2 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளது.

இதுகுறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த சென்குப்தா கூறியபோது, எனது கணவரின் வருமானம் போதுமானதாக இல்லாததால் நானும் பணியாற்றி வருகிறேன். அமெரிக்க அரசின் புதிய திட்டத்தால் நான் உட்பட பலர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அண்மைகாலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. கடந்த பெப்ரவரி 7-ம் தேதி கன்சாஸ் மாகாணத்தில் அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் சுட்டதில் இந்திய பொறியாளர் நிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மார்ச் 4-ம் தேதி வாஷிங்டனின் கென்ட் பகுதியில் இந்திய தொழிலதிபர் அமித் படேல் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த மார்ச் 18-ம் தேதி பென்சில்வேனியாவின் உள்ள ஓட்டலில் இந்திய இளைஞர் அங்குர் மேத்தா கொடூரமாக தாக்கப்பட்டார்.

எனவே பெரும்பாலான இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் கனடாவுக்கு இடம்பெயர திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது

SHARE